சார்பு எழுத்துகள்
(முதலெழுத்துகளைச்
சார்ந்து வருபவை)
சார்பெழுத்துகள்
பத்து வகைப்படும்.
1.
உயிர்மெய்
2.
ஆய்தம்
3.உயிரளபெடை
4.
ஒற்றளபெடை
5.
குற்றியலுகரம்
6.
குற்றியலிகரம்
7.
ஐகாரக்குறுக்கம்
8.
ஔகாரக்குறுக்கம்
9.
மகரக்குறுக்கம்
10.
ஆய்தக்குறுக்கம்
1.
உயிர்மெய் (குறில் – 1
மாத்திரை, நெடில் – 2 மாத்திரை)
உயிர்
எழுத்தும் மெய் எழுத்தும் சேர்ந்து வருவது உயிர்மெய் ஆகும்.
உயிர்மெய் எழுத்துக்கள் மொத்தம் 216 ஆகும்.
1.
உயிர்மெய் குறில்
-
2.
உயிர்மெய் நெடில்
-
|
வகை |
எண்ணிக்கை |
|
வல்லின
உயிர்மெய் குறில் |
|
|
வல்லின
உயிர்மெய் நெடில் |
|
|
மெல்லின
உயிர்மெய் குறில் |
|
|
மெல்லின
உயிர்மெய் நெடில் |
|
|
இடையின
உயிர்மெய் குறில் |
|
|
இடையின
உயிர்மெய் நெடில் |
|
எ.கா :
க் + அ = க (1
மாத்திரை)
க் + ஆ = கா (2
மாத்திரை)
2.
ஆய்தம்
மூன்று
புள்ளிகளை உடைய தனித்த வடிவம்.
சொல்லின்
இடையில் மட்டுமே வரும். தனித்து இயங்காது.
வேறு பெயர்கள் : தனிநிலை, முப்புள்ளி, முப்பாற்புள்ளி, கேடயம், அஃகேனம், புள்ளி, ஒற்று
ஆய்த எழுத்து தனக்கு முன் உயிர் குறில் எழுத்தையும், தனக்கு பின் வல்லின
உயிர்மெய் எழுத்தையும் பெற்றே வரும்.
எ.கா: அஃது, எஃகு, இஃது
அளபெடுத்தல்
- நீண்டு ஒலித்தல்
எழுத்துகள்
தம் மாத்திரை அளவிலிருந்து நீண்டு ஒலிப்பது.
(எ.கா)
அம்மாஅ, தம்பீஇ
அளபெடை
இரண்டு வகைப்படும்.
அ.
உயிரளபெடை ஆ. ஒற்றளபெடை
3.
உயிரளபெடை (3 மாத்திரை)
உயிர் எழுத்துக்களில் நெட்டெழுத்துக்கள் ஏழும் தனக்குரிய
இரண்டு மாத்திரையிலிருந்து மூன்று மாத்திரையாக நீண்டு ஒலிப்பது.
உயிரளபெடை மூன்று மாத்திரை பெற்று வரும்
சொல்லின் முதல்,
இடை, கடை
என மூன்று இடங்களிலும் உயிர்நெடில் அளபெடுக்கும்
உயிர் நெடில் அளபெடுக்கும் போது அதற்கு இனமான குறில்
எழுத்து தோன்றும் 'ஐ'-க்கு 'இ'யும், 'ஒள'-க்கு 'உ'-ம் இன
எழுத்தாக வரும்.
(எ.கா)
1. ஓஒதல் வேண்டும் - முதல்
2. கெடுப்பதூஉம்
– இடை
3. படாஅ
பறை – கடை
உயிரளபெடை
மூன்று வகைப்படும்.
1. செய்யுளிசை அளபெடை (அ)
இசைநிறை அளபெடை
2. இன்னிசை அளபெடை
3.
சொல்லிசை அளபெடை
1. செய்யுளிசை அளபெடை
(அ) இசைநிறை அளபெடை
செய்யுளில் ஓசை
குறையும்போது, உயிர் நெட்டெழுத்துகள் அளபெடுத்தல்.
ஓஒதல் வேண்டும் - மொழி முதல்
உறாஅர்க் - மொழி இடை
நல்ல படாஅ - மொழி இறுதி
2. இன்னிசை அளபெடை
செய்யுளில் ஓசை குறையாத
இடத்திலும் அளபெடுப்பது
கெடுப்பதூஉம், எடுப்பதூஉம்
3. சொல்லிசை அளபெடை
செய்யுளில் ஒரு
பெயர்ச்சொல் எச்சச் சொல்லாகத் திரிந்து அளபெடுப்பது.
உரனசைஇ, வரனசைஇ (நசை - விருப்பம்) விரும்பி
பெரும்பாலும்
செய்யுளிசை (அ) இசைநிறை அளபெடை எனில் 'அ'வும்.
இன்னிசை அளபெடையெனில் 'உ'வும்,
சொல்லிசை
அளபெடை யெனில் 'இ'யும்
அளபெடுக்கும்.
4. ஒற்றளபெடை :- (1 மாத்திரை)
ஒற்றளபெடையில்,
மெல்லின எழுத்துக்கள் ஆறும்,
இடையின எழுத்துக்கள் நாலும் (ர்,
ழ் தவிர), ஆய்த
எழுத்து ஒன்று என பதினோறு எழுத்துக்கள் அளபெடுக்கும்
வல்லின எழுத்துக்கள் ஆறும் (க், ச், ட், த், ப், ற்) மற்றும்
இடையின எழுத்துக்களில் இரண்டும் (ர்,
ழ்) என எட்டு(8) எழுத்துக்கள் ஒற்றளபெடையில் அளபெடுக்காது.
ஒற்றளபெடை - 1 மாத்திரை அளவைப் பெறும். எ.கா :- எங்ஙனம்
5. குற்றியலுகரம் : (க்+உ=கு, குறைந்து ஒலிக்கும்
உகரம்)
குற்றியலுகரம்
= குறுமை+இயல்+உகரம்
உ’ ஆனது தனது ஒரு மாத்திரையிலிருந்து அரை மாத்திரையாக
குறைந்து ஒலிப்பது குற்றியலுகரம்.
குற்றியலுகரத்தின் மாத்திரை அளவு- ½ மாத்திரை
சொற்களின் இறுதியில் ஆறு வல்லின மெய் எழுத்துக்கள்
‘உ’கரத்துடன் சேர்ந்து வரும் போது குறைந்து ஒலிக்கும்.
[கு (க்+உ), சு (ச்+உ),
டு (ட்+உ), து (த்+உ), பு
(ப்+உ), று (ற்+உ)]
குற்றியலுகரம்: 6 வகைப்படும்
1. நெடில் தொடர்க் குற்றியலுகரம்
2. உயிர் தொடர்க் குற்றியலுகரம்
3. ஆய்தத்தொடர்க் குற்றியலுகரம்
4. வன்றொடர்க் குற்றியலுகரம்
5. மென்றொடர்க் குற்றியலுகரம்
6. இடைத் தொடர்க் குற்றியலுகரம்
1. நெடில்தொடர்க்
குற்றியலுகரம்
தனிநெடிலைத் தொடர்ந்து
வரும் குற்றியலுகரம்.
இவை ஈரெழுத்துச்
சொற்களாவே அமையும்.
(எ.கா) பாகு, மாசு, பாடு, காது, ஆறு.
2. ஆய்தத்தொடர்க்
குற்றியலுகரம்
ஆய்த எழுத்தைத்
தொடர்ந்து வரும் குற்றியலுகரம். (எ.கா) எஃகு,
அஃது
3. உயிர்த்தொடர்க்
குற்றியலுகரம்
தனி நெடில் அல்லாத
உயிரெழுத்தைத் தொடர்ந்து வரும் குற்றியலுகரம்.
(எ.கா) கயிறு, ஒன்பது,
வரலாறு, அழகு,
அரசு, பண்பாடு, உனது, உருபு, பாலாறு, தேனாறு, வலது, இடது
[ழ்+அ=ழ, ப்+ஆ=பா, ன்+அ=ன, ர்+உ=ரு]
4. வன்றொடர்க் குற்றியலுகரம்
வல்லின மெய்களைத்
தொடர்ந்து வரும் கு, சு, டு, து, பு, று.
(எ.கா) பாக்கு, பேச்சு,
பாட்டு, பத்து, உப்பு, பற்று
5. மென்றொடர்க் குற்றியலுகரம்
மெல்லின மெய்களைத்
தொடர்ந்து வரும் கு, சு, டு, து, பு, று.
(எ.கா) பங்கு, மஞ்சு, பண்பு, பந்து, அம்பு,
கன்று
6. இடைத்தொடர்க்
குற்றியலுகரம்
இடையின
எழுத்துக்களைத் தொடர்ந்து வரும் கு,
சு, டு, து, பு, று.
(எ.கா) எய்து, மார்பு,
சால்பு, மூக்கு
முற்றியலுகரம் : (தனக்குரிய மாத்திரையிலிருந்து குறையாத உகரம்)
தனிக்குறிலை
அடுத்து வரும் வல்லின உகரங்கள் ஒரு மாத்திரை அளவில் முழுமையாக ஒலிக்கும். இதற்கு
முற்றியலுகரம் என்று பெயர்.
(எ.கா)
புகு, பசு, விடு, அது,
வறு, மாவு, ஏழு.
6. குற்றியலிகரம்
(குறுமை+இயல்+இகரம்)
இகரம்
தன் ஒரு மாத்திரை அளவிலிருந்து குறுகி ஒலிப்பது குற்றியலிகரம்
ஆகும்.
நிலைமொழியின்
ஈற்றெழுத்து குற்றியலுகரமாக இருந்து வருமொழியின் முதலெழுத்து யகரம் வரின் ‘உகரம்’
இகரமாகத் திரியும்.
v
நாகு+யாது
= நாகியாது
v
வீடு+யாது
= வீடியாது
v
வண்டு+யாது
= வண்டியாது
v
வரகு+யாது
= வரகியாது
அசைச்சொல்
விதி:
v
மியா
என்னும் அசைசொல்லில் உள்ள இகரமும்,
தன் (ம்+இ=மி) மாத்திரையிலிருந்து குறைந்து ஒலிக்கும்.
(எ.கா) கேள்+மியா -
கேண்மியா.
செல்+மியா-சென்மியா.
தனிக்குறிலை
அடுத்து வரும் உகரங்கள்,
ஈற்றிலுள்ள மெல்லின இடையின உகரங்கள் ஆகியவை முற்றியலுகரங்கள்
நால்வகைக் குறுக்கங்கள்
எழுத்துகள் தம்
மாத்திரை அளவிலிருந்து குறைந்து ஒலிப்பதை குறுக்கங்கள் என்கிறோம்.
7. ஐகாரக்குறுக்கம் (
ஐகாரம் சொற்களின் முதல்,
இடை, இறுதி ஆகிய இடங்களில் வரும்போது
தனக்குரிய இரண்டு மாத்திரை அளவிலிருந்து குறைந்து ஒலிக்கும்.
*
சொல்லின்
முதல் - வையம்
ஒன்றரை மாத்திரை.
*
சொல்லின்
இடை - சமையல் -ஒரு மாத்திரை.
*
சொல்லின்
இறுதி - பறவை -ஒரு மாத்திரை.
8. ஔகாரக்குறுக்கம்(
ஔ
வௌ எழுத்துகள் சொற்களின் முதலில் வரும்போது தனக்குரிய இரண்டு மாத்திரை
அளவிலிருந்து குறைந்து ஒலிக்கும்.
ஔவையார், வௌவால் -
ஒன்றரை மாத்திரை.
ஔகாரக்குறுக்கம்
சொல்லின் இடையிலும் இறுதியிலும் வராது.
9. மகரக்குறுக்கம்
மகர
மெய்யானது தனக்குரிய அரை மாத்திரை அளவிலிருந்து குறைந்து கால் மாத்திரை அளவில்
ஒலிக்கும். நிலைமொழியில் மகரமும்,
வருமொழியில் வகரமும் வரும் போது.
(எ.கா)
வலம் வந்தான். போன்ம் (போலும்),
மருண்ம்
(மருளும்)
10. ஆய்தக்குறுக்கம்
ஆய்த
எழுத்தானது தனக்குரிய அரை மாத்திரை அளவிலிருந்து குறைந்து கால் மாத்திரை அளவில்
ஒலிக்கும்.
(எ.கா) முள்+தீது - முஃடீது.
கல்+தீது – கஃறீது
.png)